ஒபாமாவின் வாழ்க்கையில் ஒருநாள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கட்சிகளும், கட்சித்தலைவர்களும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், தனக்கு பதவிக்காலம் முடிவடையவிருப்பதை முன்னிட்டு, அரசு முறை சுற்றுலா செல்வது பத்திரிகையாளர்களை சந்திப்பது என பரபரப்பாக இயங்கி வருகிறார்.
ஏனெனில், ஒரு நாட்டின் அனைத்து பொறுப்புகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனாதிபதியின் வாழ்க்கை என்பது மிகவும் பரபரப்பு நிறைந்ததாகவும், சொந்தவாழ்க்கை கூட அரசியல் நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்நிலையில், ஜனாதிபதியாக அல்லாமல் தனது சொந்த வாழ்க்கையில் ஒரு நாள், எப்படி இருக்கும் வேண்டும் என ஆசைப்பட்ட ஒபாமா அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாவது
ஒபாமா, ஹாயாக சோபாவில் படுத்திருக்கிறார், அப்போது அங்கு வரும், துணை ஜனாதிபதி உங்களுடைய ஓட்டுநர் உரிமம் கலாவதியாகிவிட்டது என ஒபாமாவிடம் தெரிவிக்கிறார்.
ஓ மை காட்... என்னசெய்வது என ஒபாமா கேட்க, உங்களுக்கு தான் கோல்ப் விளையாட்டு நன்றாக தெரியுமே, அதனால் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளிக்குசென்று அதற்கான பயிற்சியை அளித்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து கொள்ளுங்கள் என கூறுகிறார். (அமெரிக்க நாட்டு சட்டப்படி ஓட்டுநர் உரிமம் கலாவதி ஆகிவிட்டால், அபராதம் செலுத்தி அதனை புதுப்பிக்க இயலாது, மீண்டும் புதிதாக தான் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு மாற்றுவழியாக ஏதேனும் பாடசாலைக்கு சென்று தன்னார்வ சேவை செய்தால் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது).
அதன்படியே, ஓட்டுநர் உரிமம் பெறும் அலுவலகத்திற்கு செல்கிறார், அங்கு இவருக்கு டோக்கன் நம்பர் 34 வழங்கப்படுகிறது.
டோக்கன் நம்பர் 34 என அழைக்கும் அப்பெண்மணியிடம் சென்று, தனது பெயர் மற்றும் தான் வந்ததற்கான காரணத்தை விளக்குகிறார். இதனுடன் ஒரு காட்சி நிறைவடைகிறது.
அடுத்தபடியாக, தனது மனைவியின் கைப்பேசியினை எடுத்து, செல்பி அப்பிளிகேஷனை பயன்படுத்தி நான் ஜனாதிபதி ஒபாமா, நான் வேலை பார்க்கிறேன் என கூறிக்கொண்டிருக்கையில், விரைந்து வரும் மிச்செல் ஒபாமா, கைப்பேசியினை அவரது கையில் இருந்து கைப்பற்றுகிறார்.
இவ்வாறு செய்தால், இது சமூகவலைதளங்களில் பரவிவிட வாய்ப்புள்ளது என கூறுகிறார், ஒபாமாவும் ஆமாம் நீ (மிச்செல்) கூறுவது சரிதான் எனக்கூறுகிறார்.
இதற்கு அடுத்தகாட்சியாக, துணை ஜனாதிபதியுடன் திரையரங்குக்கு செல்லும் ஒபாமா பாப் கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கிறார்,
படத்தினை பார்க்கும் துணை ஜனாதிபதி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுகிறார், ஒபாமா அவரது தோளில் தட்டி சமாதானப்படுத்துகிறார்.
அதன் பின்னர் படம் முடிந்தவுடன் திரையரங்கை விட்டு இருவரும் வெளியே வருகின்றனர்,
அப்போது துணை ஜனாதிபதி , ஒாபமாவிடம் நாளை நான் மெக்டொனால்ட் செல்கிறேன், அங்கு சில உணவுகளில் இலவச சலுகை வழங்கப்படவிருக்கிறது என கூறுகிறார்.
ஒபாமாவும், அப்படியா என கேட்கிறார் அதனுடன் வீடியோ நிறைவடைகிறது.
ஒபாமாவின் வாழ்க்கையில் ஒருநாள்!
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment