குட்டி இளவரசிக்கு இன்று முதலாவது பிறந்தநாள்: இளவரசியை பற்றி தெரியாத 10 தகவல்கள்...
பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டனின் இளைய மகளான சார்லோட் இன்று தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடுவதால் பிரித்தானிய அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது.
இளவரசியான கேட் மிடில்டனிற்கு கடந்த மே 2-ம்திகதி பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள St.Mary’s என்ற மருத்துவமனையில் சார்லோட் இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
வழக்கமாக அரசு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்க பிரத்யோகமான புகைப்பட கலைஞர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
ஆனால், சார்லோட்டின் இந்த முதல் பிறந்தநாளுக்கு அவரது தாயாரான கேட் மிடில்டன் விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
குட்டி இளவரசி பிறந்தது முதல் தற்போது ஒருவருடம் பூர்த்தியாகும் வரையில், அவரை மையப்படுத்தி அரச குடும்பத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் குட்டி இளவரசியின் தனிப்பட்ட பண்புகள் குறித்து 10 சிறப்பு அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
குட்டி இளவரசி எளிமையான, பழகுவதற்கு இனிமையானவர்
பிறந்த குழந்தைகள் தொடக்கத்தில் எளிமையாகவும், பழகுவதற்கு இனிமையானவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், குட்டி இளவரசியை பொறுத்த வரை அவரது தந்தையான வில்லியம்ஸ் அவர் மீது அளவு கடந்தபாசத்தை வைத்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.
எனினும் ‘குழந்தைகள் ஆரம்பத்தில் எளிமையானவர்களாக தான் இருப்பார்கள். ஆனால்,11, 12 வயதுகளை அடையும்போது அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒரு மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் என வில்லியம்ஸின் நண்பர்கள்கூறியுள்ளனர்.
நண்பர்களின் கூற்றை ஏற்றுக்கொண்ட வில்லியம்ஸ், அந்த காலக்கட்டத்தை எதிர்கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன்’ எனக்கூறியுள்ளார்.
இந்தியாவிலும் குட்டி இளவரசியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த மே மாதம் 2015ம்ஆண்டு குட்டி இளவரசி பிறந்தபோது, இளவரசி கேட் மிடில்டனிற்கு 3,500 பவுண்ட் மதிப்புள்ள வைர காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கடந்த மாதம் அரச தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது, இளவரசி கேட் மிடில்டன்அந்த ஆபரணங்களை அணிந்து தனது மகளின் பிறந்த நாளை நினைவுப்படுத்தினார்.
எனினும், இந்த ஆபரணம் இந்தியாவிலிருந்து பரிசாக அளிக்கப்பட்டதா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
குட்டி இளவரசர் ஜோர்ஜை விட அவரது தங்கை அதிகம் தூங்குவார்
பொதுவாக, குழந்தைகளை இரவு நேரத்தில் தூங்கவைப்பது என்பது பெற்றவர்களுக்கு மிகவும் கடினமான விடயம். இதில், இளவரசர் படு சுட்டி. இரவு நேரங்களில் தூங்காமல் அதிக நேரம் விளையாடுவார்.
அண்மையில்,ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இளவரசர் சார்லஸ் தனது கொள்ளு பேத்தியான சார்லோட்டை பற்றி தனது நண்பர்களுடன் பேசியுள்ளார்.
அப்போது, ‘இளவரசர் ஜோர்ஜை விட, குட்டி இளவரசி சார்லோட் சீக்கரமாகவே தூங்க சென்றுவிடுவார். அதேபோல் ,இரவு நேரங்களில் அதிக நேரம் தூங்குவதும்அவர் தான்’ என புகழ்ந்துள்ளார்.
தந்தையை உணர்ச்சி வசப்படுத்திய குட்டி இளவரசி
அப்பாவான இளவரசர் சார்லஸ் பற்றி மகன் வில்லியம்ஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தனது இரு பிள்ளைகள் பற்றியும் பேசியுள்ளார்.
அப்போது, ‘இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது ஒரு நெகிழ்ச்சிகரமானதாக உள்ளது. அதுவும், குட்டி இளவரசி பிறந்தது முதல் தன்னை ஒவ்வொரு விடயத்திலும் அதிகம் உணர்ச்சிகரமான தந்தையாக மாற்றியுள்ளார் என்பது உண்மை தான் என உருக்கமாக பேசியுள்ளார்.
முதன் முதலாக பனிச்சறுக்கில் விளையாடிய குட்டி இளவரசி
குட்டி இளவரசியின் இந்த ஒரு வருடக்காலத்திலும், எதிர்வரும் வாழ்விலும் முதன் முதலாக பனிச்சறுக்கில் ஈடுபட்டது கடந்த மார்ச் மாதம்தான்.
10 மாதக்குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு அழைத்துச்சென்று பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுத்தியது ஒரு மறக்க முடியாது அனுபவம் ஆகும்.
பிரித்தானிய மகாராணிக்கு அதிக செல்லம் குட்டி இளவரசி தான்
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஜோர்ஜ் மற்றும் சார்லோட் ஆகிய இருவரையும் மிகவும் பிடிக்கும். இருப்பினும், குட்டி இளவரசி சார்லோட் மீது அவர் எப்போதும் செல்லமாகவே இருந்து வருகிறார்.
குறிப்பாக, ‘குட்டி இளவரசி எந்த சூழலில் வளர வேண்டும் என்பதில் மகாராணி கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.
அதே சமயம், ஜோர்ஜ் மற்றும் சார்லோட் அரண்மனைக்கு வந்துவிட்டால், இருவருக்கும் ஏராளமான விளையாட்டு பொருட்களை குவித்து வைத்து மகாராணி உற்சாகப்படுத்துவார்.
குட்டி இளவரசிக்கு பிடித்தமான விளையாட்டு பொருள் எது?
அரண்மனையில் எண்ணற்ற விளையாட்டு பொருட்கள் இருந்தாலும், குட்டி இளவரசிக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு பொருள் ’Fuddlewuddle’ என அழைக்கப்படும் ஒரு குட்டி நாய் பொம்மை தான். இந்த பொம்மையை பிரித்தானியாவை சேர்ந்த Jellycat என்ற நிறுவனம் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
குட்டி இளவரசி புத்தகங்கள் வாசிப்பத்தை விரும்பி கேட்பார்
பயணங்களில் ஈடுபடும் போது இளவரசியான கேட் மிடில்டன் ஆங்கில நாவல்களை அதிகம் விரும்பி படிப்பார். இதுபோன்ற தருணங்களில் குட்டி இளவரசியும் தனது தாயுடன் சேர்ந்து உற்று கவனிப்பார்.
குறிப்பாக Julia Donaldson என்ற எழுத்தாளர் எழுதிய The Gruffalo என்ற புத்தகத்தை கேட் மிடில்டன் வாசிக்கும்போது குட்டி இளவரசி ஆர்வமாக கவனிப்பார் என ஒரு நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவை சந்திக்க தவறிய குட்டி இளவரசி
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்செல் ஆகியோர் கடந்த வாரம் இங்கிலாந்து அரண்மனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால், இரவு நேரம் என்பதால் ஒபாமா வருவதற்கு முன்னதாகவே குட்டி இளவரசி படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துள்ளார் (இதை தான் இளவரசர் சார்லஸ் நன்றாக கவனித்து கூறியுள்ளார்). எனினும், விழித்திருந்த ஜோர்ஜ் ஒபாமாவை உற்சாகமாக வரவேற்று அவருடன் சில நிமிடங்கள் பொழுதுபோக்கியுள்ளார்.
நீண்ட தலைமுடியுடன் காட்சியளிக்கும் குட்டி இளவரசி
குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு ஒரு வயது பூர்த்தியானபோது, அவ்வளவாக தலைமுடி வளர்ந்திருக்கவில்லை. ஆனால், அண்மையில் மகாராணி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடியபோது அவரது மடியில் குட்டி இளவரசி சார்லோட் அமர்ந்துள்ளார்.
அப்போது, அவரது தலைமுடியை வடிவாக அலங்காரம் செய்துக் கொள்ள தலையில் ‘க்ளிப்’அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குட்டி இளவரசிக்கு இன்று முதலாவது பிறந்தநாள்: இளவரசியை பற்றி தெரியாத 10 தகவல்கள்...
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment