அண்மைய செய்திகள்

recent
-

Google Game Changer விருதினை வென்ற தமிழரின் நிறுவனம்....


கலிபோர்னியா தொழிற்நுட்ப பிரதேசமான Silicon Valley மற்றும் Google நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட Google Game Changer விருதினை தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனமான Knowledgehook தட்டிச்சென்றுள்ளது.

கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்திற்கு 500 ஆரம்பநிலை மென்பொருள் நிறுவனங்கள் இந்த விருதினை பெறும்பொருட்டு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தன.

இந்த நிகழ்வில் பங்கேற்ற 100 முதலீட்டாளர்களின் முன்னிலையில், 11 நிறுவனங்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான இணைய வாக்குகளை பெற்று Knowledgehook என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டிற்கான Google Game Changer விருதினை தட்டிச்சென்றுள்ளது.

இந்த விருது கிடைக்கும்பொருட்டு இணையம் வழியாக பேராதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள Knowledgehook நிறுவனம், குறிப்பாக லங்காசிறி குழுமத்தினருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கணித திறனை அதிகரிக்கும் விதத்தில் பல்வேறு மென்பொருள்களை உருவாக்கிவரும் Knowledgehook, இந்த விருதினை பெற்றதன் மூலம், வரும்காலங்களில் பெரிய அளவில் முதலீடுகளை தன்வசம் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.




Google Game Changer விருதினை வென்ற தமிழரின் நிறுவனம்.... Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.