வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் போராட்டம்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடமாகாண சபை அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே தமது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு, பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னமும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிப்பதோடு, தாம் பலவருடங்களாகவே தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போர்க் காலங்களின் போது நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், மீள்குடியேற்றங்களின் போது தாங்கள் மாணவர்களுக்கு சேவைகளை வழங்கி வந்ததாகவும், இருப்பினும் இதுவரை தமக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை வடமாகாண தொழில்நுட்ப சங்க மாணவர்கள் சிலர் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போரட்டத்தை முன்னெடுத்தனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்புப் போராட்டம்...
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment