அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016


மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016
இலங்கையின் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆசிரியர் மாநாடுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் வடமாகாணத்தில் உள்ள 12 வலயங்களும் ஆசிரியர் மாநாடு வெகுசிறப்பாக நடாத்துகின்றது. எங்கள் (மன்னார் வலயம்-மன்னார்-நானாட்டான்-முசலி இம்மூன்று பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக) மன்னார் வலயமும் இரண்டு நாள் நிகழ்வாக சிறப்பிக்கவிருக்கின்றது.
ஆசிரியர் மாநாடு ஆனது ஆசிரியர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பதோடும் அவர்களின் திறமையினை ஆளுமையினை வெளிப்படுத்தி முதன்மைப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும். இவ்விரண்டு நாள் நிகழ்விலும் ஆசிரியர்களின் முழுமையான பங்களிப்பே செயல் திறன் மிக்கதாக அமையும்.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.செலின் சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் தலைமையில்….

இடம்-
மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி(தே.பா)
மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி(தே.பா)
மன்-அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம்(தே.பா)

நேரம்-மு.ப.8-30-பி.ப.5.30 வரை
காலம்-14-15-06-2016(இரண்டு நாள் நிகழ்வு)

கல்விக்கண்திறக்கும் ஆசிரியர்களின் அளவற்ற சேவையினை தியாக சிந்தையினை போற்றி பாராட்ட அனைவரும் ஒன்று கூடுவோம்…..நிகழ்வில் கலந்து சிறப்பிப்போம்…






மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016 Reviewed by Author on June 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.