மூலிகை சிகிச்சையால் வந்த வினை: முகத்தில் துளை விழுந்த பரிதாபம்....
அமெரிக்க பெண்மணி ஒருவர் தமது தோல் புற்றுநோய் குணமாவதற்காக முகத்தில் பூசி வந்த மூலிகையால் அவரது மூக்கு நுனியில் துளை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான அமெரிக்க பெண்மணி ஒருவர், புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருட்டு Black Salve எனப்படும் மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளார்.
இது புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை என அவருக்கு கூறப்பட்டதால் அவர் தொடர்ந்து இந்த மூலிகை பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால் நாளடைவில் அவரது மூக்கின் நுனியில் உள்ள தோல் சிறுகச்சிறுக கருகி வந்துள்ளது. பின்னர் அந்த பகுதியில் துளை விழும் அளவுக்கு அப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் இதுகுறித்து மருத்துவ அமைப்பு ஒன்றிற்கு தமது நிலை குறித்து வீடியோ பதிவு ஒன்றை அளித்துள்ளார்.
Black Salve உடலில் உள்ள திசுக்களை அழிக்க பயன்படுத்தப்படுவது. குறிப்பாக 1900 காலகட்டத்தில் வெட்டுக்காயங்களில் இந்த மூலிகையை பூசி வந்துள்ளனர்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் தற்போது இந்த மூலிகையை தடை செய்வது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் Black Salve மூலிகையால் புற்றுநோய் குணமாகாது எனவும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மூலிகை சிகிச்சையால் வந்த வினை: முகத்தில் துளை விழுந்த பரிதாபம்....
Reviewed by Author
on
June 01, 2016
Rating:

No comments:
Post a Comment