அண்மைய செய்திகள்

recent
-

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ்!


பொருளாதார வளர்ச்சியில் பீடுநடை போட்டு வரும் சுவிஸ் நாடு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பொருளாதாரத்தில் போட்டியிட்டு வளர்ச்சி காணும் நாடுகளில் சுவிஸ் ஐரோப்பாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மட்டுமின்றி உலக அளவில் இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட சுவிஸ், அசுர வளர்ச்சி காரணமாக இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு குதிப்புடன் முன்னேறியுள்ளது.

அசுர வேகத்தில் பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் முதலிடத்தை ஹாங்காங் எட்டிப்பிடித்துள்ளது. பல்வேறு காரணங்களால் அமெரிக்கா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நான்காவது இடத்தையும் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் 5-வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது. மட்டுமின்றி முதல் பத்து இடங்களில் டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோதும் சுவிஸ் நாடு மிக விரைவில்அதில் நின்று மீண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள IMD இயக்குனர் அர்துரோ பிரிஸ், பொருளாதார செயல்திறனில் மட்டும் 10-வது இடத்தில் உள்ள சுவிஸ், எஞ்சிய அனைத்து பட்டியலிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது என்றார்.

கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்தே உலக பொருளாதார தரவரிசையினை வெளியிட்டுவரும் IMD இந்த முறை 340 அடிப்படை விதிகளை பூர்த்தி செய்யும் 61 நாடுகளை தெரிவு செய்துள்ளது.

இதில் பொருளாதார செயல்திறன், அரசின் செயல்பாடு, வணிக செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவை அடங்கும்.

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ்! Reviewed by Author on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.