அண்மைய செய்திகள்

recent
-

சச்சின் மகனுக்காக உலகசாதனை படைத்த பிரணவ் ஜூனியர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாரா?


சச்சின் மகன் இடம்பெற்றுள்ள மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் 1009 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே சேர்க்கப்படாதது தொடர்பாக சர்ச்சை கிளம்புள்ளது.

பண்டாரி கிண்ணப் போட்டியில் ஆர்.கே.காந்தி பள்ளிக்காக ஆடிய பிரணவ் தனவாடே ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிராக 1009 ஓட்டங்கள் குவித்து 117 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் சச்சின் மகன் அர்ஜூன் விளையாடும் மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் அவரை சேர்க்கவில்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பிரணவ் தனவாடேவின் தந்தை பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், அர்ஜுனும் பிரணவ்வும் நல்ல நண்பர்கள். இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையால் முன்னேறி வருகின்றனர்.

மேற்கு மண்டல அணி வீரர்கள், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர்.

அதில் அர்ஜூன் இடம்பெற்றிருந்ததால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் பிரணவ் அந்த அணியில் இல்லை. அப்படியிருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை? பிரணவ் தெரிவு பெறாததற்கு தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

சச்சின் மகனுக்காக உலகசாதனை படைத்த பிரணவ் ஜூனியர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாரா? Reviewed by Author on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.