வவுனியாவில் பிரபல வர்த்தகர் இனந்தெரியாதவர்களினால் கடத்தல்!
வவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்று மாலை கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இன்று மாலை வீடு திரும்பிய குறித்த வர்த்தகரை வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பொலிஸார், கடத்தப்பட்டவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் அவருடைய கைத்தொலைபேசி உள்ளிட்டவைகளை வீட்டு வாசலில் இருந்து மீட்டுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவமானது, வவுனியா வர்த்தகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை ஆராயவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகம் அவர்களின் புதல்வரான செல்வராஜா எஸ்.எஸ்.ஆர் முதலாளி என நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகராவார்.
குறித்த நபரை யார்? என்ன தேவைக்காக கடத்தினார்கள் என்பது குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment