ஓமந்தையில் பொருளாதார மையம் அமைய வேண்டும்! விவசாய அமைப்புக்கள் உண்ணாவிரதம்
வவுனியா, ஓமந்தை பகுதியில் பொருளாதார மையம் அமைய வேண்டும் என கோரி நெடுங்கேணி விவசாய அமைப்புக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுங்கேணி விவசாய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டமானது வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றது.
ஓமந்தைப் பகுதியில் பொருளாதார மையம் அமையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இலகுவாக இருக்கும் என்பதுடன் போதிய இடவசதியுள்ள இடமாகவும் அமையும் என உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நெடுங்கேணி விவசாய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டமானது வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றது.
ஓமந்தைப் பகுதியில் பொருளாதார மையம் அமையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இலகுவாக இருக்கும் என்பதுடன் போதிய இடவசதியுள்ள இடமாகவும் அமையும் என உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஓமந்தையில் பொருளாதார மையம் அமைய வேண்டும்! விவசாய அமைப்புக்கள் உண்ணாவிரதம்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
June 29, 2016
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
June 29, 2016
 
        Rating: 

No comments:
Post a Comment