அண்மைய செய்திகள்

recent
-

பாடகராக அவதாரம் எடுக்கும் கோஹ்லி....


இந்தியாவில் Premier Futsal League போட்டிகள் வருகிற ஜீலை மாதம் 15ம் திகதி தொடங்குகிறது. இப்போட்டிகளுக்கு Brand Ambassador-ஆக வீராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலொன்று தயாராகிறது, இந்த பாடலில் சில வரிகளை கோஹ்லி பாடவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்றைக்குமே ஆடுகளத்தில் பதற்றமாக இருந்ததில்லை, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடப்போகிறேன் என்பது தான் பதற்றமாக இருக்கிறது.

அவர் என்னுடைய நாயகன், எனது 27 வருட வாழ்வை திரும்பி பார்த்தால் ஏ.ஆர்.ரஹ்மான் நினைவலைகள் கூடவே வரும், அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டி20, ஒருநாள் போட்டிகளுக்கு அணித்தலைவராக நியமிக்கப்படுவீர்களா என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாடகராக அவதாரம் எடுக்கும் கோஹ்லி.... Reviewed by Author on June 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.