மன்னார் மாவட்டத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள் நானாட்டான் றசூல்புதுவெளி பகுதியில் 12 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை திருட்டு
அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன இவ்வாறான சூழலில் தொடர்ச்சியாக மன்னார் நகரம் மற்றும் நானாட்டான் பிரதேசத்திற்குட்பட்ட பல பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன
முகங்களை மூடிக்கொண்டு மர்மமான தோற்றத்தில் வரக்கூடிய நபர்களால் இவ்வாறான திருட்டுக்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது இவ்வாறான சூழலில் நானாட்டான் றசூல்புதுவெளி கிராமத்தில் நேற்றைய தினம் 12 லட்சம் ரூபா பெருமதியான நகை திருட்டுப் போய் உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருகின்ற பொழுது குறித்த வீட்டில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் தாயும் 2 பிள்ளைகளும் மாத்திரமே வசித்து வருகின்றனர் இச்சூழலில் காலையில் தாய் தன்னுடைய வேலை நிமித்தமாக வெளியில் சென்று இருந்த பொழுதுவீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 12 லட்சம் ரூபா பெருமதி உள்ள மோதிரங்கள் காதணிகள் மேலும் பல நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது தெரிய வந்துள்ளது
குறித்து விடயம் தொடர்பில் முருங்கன் போலீசாரிட முறைபாடு செய்யப்பட்டு போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் இச்சூழலில் குறித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்ற நிலையில் போலீசார் இதுவரையில் குறித்த நபர்களை கைது செய்யாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
Reviewed by Vijithan
on
October 20, 2026
Rating:


No comments:
Post a Comment