அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய பெண் எம்.பி மீது துப்பாக்கி சூடு: மருத்துவமனையில் கவலைக்கிடம்.....


பிரித்தானிய பெண் எம்.பி ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தியுள்ள சம்பவத்தை தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சி எம்.பியான Jo Cox என்பவர் West Yorkshireல் உள்ள Birstall என்ற நகரில் சற்று முன்னர் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் எம்.பியை முதலில் துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் கத்தியால் குத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் ஹெலிகொப்டர் மூலம் தூக்கிச் செல்லப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இதுவரை வெளியான தகவலில் அவர் இன்னும் அபாயக் கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு நபர்களுக்கு இடையே எழுந்த பிரச்சனையை தடுக்க எம்.பி சென்றபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 52 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எம்.பி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிரதமர் டேவிட் கமெரூன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான ஜெரூமி கொர்பைன் ஆகியவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய பெண் எம்.பி மீது துப்பாக்கி சூடு: மருத்துவமனையில் கவலைக்கிடம்..... Reviewed by Author on June 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.