அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (01-07-2016) கேள்வி பதில்


கேள்வி: -
                     என் மதிப்பிற்குரிய சட்டத்தரணி அவர்களே நான் (× - × - ×) .சாவகச்சேரி சர் நான் ஏழு வருடத்திற்கு முன் தொழில் செய்வதற்காக எனது வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கியிருந்தேன்!.. தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.நான் வெளிநாட்டுற்கு வேலைக்கு சென்று அங்கு பிடிபட்டு ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தேன்.தற்பொழுது வங்கியிலிருந்து நீதீமன்றம் மூலமாக எனது வீட்டினை பகிரங்க ஏலமிடுவதாக நீதிமன்ற கட்டளை கடிதம் வந்துள்ளது. சர் நான் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு இடத்தையும் எடுத்துக்கொள்வார்களா?

பதில்: - 
             அன்பான சகோதரரே நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், அந்தக் கடனுக்கு ஈடாக அடமானம் வைத்த சொத்தை உள்ளது உள்ளபடியே வங்கி பறிமுதல் செய்யும்!. செலுத்தாமல் இருக்கும் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பிரித்து எடுக்க வங்கிக்கு அதிகாரமில்லை.சொத்து மதிப்பீட்டாளர் மூலம் அந்த இடத்தின் சந்தை மதிப்புக் கணக்கிடப்பட்டு வெளிப்படையான ஏலம் விடப்படும். பறிமுதல் செய்யப் பட்ட சொத்தின் மதிப்பு, கடன் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் கடனை கழித்துக்கொண்டு மீதித் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு வங்கி திருப்பித் தந்துவிடும்.


குறிப்பு 

 சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .

இன்றைய (01-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.