அண்மைய செய்திகள்

recent
-

விமானத்தில் குறும்புகள் செய்த குட்டி இளவரசர் ஜோர்ஜ்....


பிரித்தானியாவின் Royal International Air Force - இன் 75 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம், கேட் மற்றும் இவர்களது மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ் ஆகியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Gloucestershire - இல் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்வில், குட்டி இளவரசர் முதல் முறையாக கலந்துகொண்டதால், அங்கு காற்றினால் ஏற்பட்ட மிகுந்த இரைச்சலின் காரணமாக ஆரம்பத்தில் அச்சம் கொண்டார்.

இதனால், அவருக்கு ஹெட்போன் வழங்கப்பட்டது, அதன் பின்னர் அங்கிருக்கும் விமானங்களை சுற்றிப்பார்த்த அவர், விமான ஆயுதங்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படும் Squirrel ஹெலிகொப்டரில் தனது பெற்றோருடன் சேர்ந்து ஏறி அமர்ந்து கொண்டு, குறும்புதனங்களை செய்துள்ளார்.


அதன் பின்னர், போருக்காக பயன்படுத்தபடும் பிரித்தானியாவின் மிகப்பெரிய விமானமான Red Arrow Hawk - ல் ஜோர்ஜை, தூக்கிகொண்டு சென்று வில்லியம் அமர வைத்துள்ளார், அந்த விமானத்தில் அமர்ந்துகொண்ட ஜோர்ஜ், அங்கிருக்கும் பட்டனை அழுத்துவதும், தனது தந்தையிடம், அப்பா நான் பறக்கிறேன் என்று சந்தோஷத்தில் கூறுகிறார்.

இதனைக்கேட்ட வில்லியம், ஆமாம் என்று பதில் கூறுகிறார், அதன் பின்னர் அங்கிருக்கும் விமானிகளுடன் சில விடயங்களை கேட்டறிந்துகொண்ட வில்லியம் மற்றும் கேட், அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


விமானத்தில் குறும்புகள் செய்த குட்டி இளவரசர் ஜோர்ஜ்.... Reviewed by Author on July 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.