முல்லைத்தீவு வட்டுவாகல் கிராம மக்களின் எதிர்ப்பு காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அளவீடு செய்து நிரந்தரமாக கடற்படைக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
முள்ளியவாய்காலில் மேற்கொள்ளவிருந்த காணி அபகரிப்பை கண்டித்து பொது மக்கள் இன்று காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமக்கு சொந்தமான காணியை நில அளவை அதிகாரிகளின் ஊடாக அளந்து படையினருக்கு வழங்க நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.
இவ்வாறான செயற்றிட்டத்தை மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு காணி உரிமையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றை உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.
தொடர்ந்தும் தமது போராட்டத்தில் பங்களிப்பு செய்த தமிழ்க் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தமிழ்க் கட்சிகள் எமது ஆர்ப்பாட்டத்துக்கு பங்காளிகளாக மட்டும் இல்லாமல் கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்டுத்தர ஆக்க பூர்வமாக செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment