நடுவானில் மோதி நொறுங்கி விழுந்த விமானங்கள்: பெண் உட்பட 3 பேர் பலி!
அமெரிக்காவில் சிறிய வகை விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணம், கேரோல்டன் நகர விமான நிலையத்தில் இரு சிறிய ரக விமானங்கள் ஓடு தளத்தில் ஒன்றாக தரையிறங்க முயற்சி செய்தன.
அப்போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் நடுவானில் பயங்கரமாக மோதி கொண்டன. இதனால் அப்படியே இரு விமானங்களும் நொறுங்கி தரையில் விழுந்தன.
இந்த பயங்கர விபத்தில் ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்று தீயணைப்புத் துறைத் தலைவர் ஸ்காட் புளூ கூறியுள்ளார்.
நடுவானில் மோதி நொறுங்கி விழுந்த விமானங்கள்: பெண் உட்பட 3 பேர் பலி!
Reviewed by Author
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment