தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி....
சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார்.
இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே.
மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றமை தடுக்கப்படவேண்டும்.
இராணுவ ஆக்கரமிப்புகளைத் தொடர்ந்து பல இந்து கோயில்கள் அழிக்கப்படுகின்றன அதே போல் இந்துக் கோயில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகள் எழுப்பப் படுகின்றன இவை நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பௌத்த விகாரைகள் அமைந்துள்ள இடங்களில் இந்துக் கோயில்கள் எழுப்ப முடியுமா? தலதா மாளிகை வளாகத்துக்குள் சென்று தமிழர்கள் இந்துக் கோயில் ஒன்றை எழுப்ப முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் விடுதலைப் புலிகள் போர் செய்த காலங்களில் பௌத்த விகாரைகள் அழிக்கப்பட வில்லை, அனைத்து கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட்டன அவற்றிக்கு மதிப்பளிக்கப்பட்டன, ஆனால் தற்போது இந்து கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றன.
இலங்கையில் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடாத்தப்பட்டு வருகின்றது இது தொடருமானால் ஒற்றுமை என்பது கானல் நீராகவே எப்போதும் காணப்படும்.
இராணுவ ஆக்கிரமிப்புகளின் மூலம் தமிழர்களின் கலாச்சாரங்களும் பாரம்பரியங்களும் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்படும் எனவும் சி.சிறிதரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி....
Reviewed by Author
on
September 08, 2016
Rating:

No comments:
Post a Comment