செல்வந்த ஜப்பானிலும் அகதிகளுக்கு பிரச்சினை!
செல்வந்த நாடான ஜப்பானிலும் அகதிகளுக்கு உரிய பராமரிப்புக்கள் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல் அடைக்கலம் கோரிய நிலையில் ஜப்பானில் இலங்கையர்கள் உட்பட்ட பலர் குடிவரவு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதி வழங்கல்களில் குறைபாடுகள் இருப்பதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. 2014ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானில் இலங்கையர்கள் உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 600 அகதிகள் அடைக்கலம் கோரியுள்ளனர்.
இதில், 2015ஆம் ஆண்டு மாத்திரம் அவர்களில் இலங்கையர் ஒருவர் உட்பட்ட 14 பேர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.
இலங்கையை குறித்த அகதிகள் உளரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அகதிகளான தாம் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகதிகள் ஜப்பானிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
செல்வந்த ஜப்பானிலும் அகதிகளுக்கு பிரச்சினை!
Reviewed by Author
on
September 20, 2016
Rating:

No comments:
Post a Comment