மன்னார் பள்ளிமுனை காணிகளை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு
மன்னார் பள்ளிமுனை காணிகளை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்குள் போதைப் பொருள் தருவிக்கும் பிரதான கேந்திர நிலையங்களில் ஒன்றாக பள்ளிமுனை காணப்படுகின்றது.
பள்ளிமுனை பிரதேசத்தில் அரச படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பள்ளிமுனை பிரதேசம் தமிழக போதைப் பொருள் வர்த்தகர்களின் ஓர் முக்கிய கேந்திர நிலையம் என்பதனை கடற்படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிமுனை பிரதேசத்தில் 25 வீடுகளை அமைக்க குறித்த காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் கோரியிருந்தார்.
எனினும், குறித்த காணிகளை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
September 20, 2016
Rating:

No comments:
Post a Comment