உலகிலேயே பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு எது தெரியுமா? சுவிற்சர்லாந்து
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் உலகிலேயே பசுமையான நகரங்களில் முதல் இடத்தை பிடித்து அந்நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Arcadis என்ற நிறுவனம் உலகளவில் பசுமையான 100 நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சுவிஸில் உள்ள சூரிச் நகர் இந்த 100 நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் பசுமையாக திகழும் முதல் 10 நகரங்களின் பட்டியல்:
- சூரிச் (சுவிட்சர்லாந்து)
- சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
- ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
- வியன்னா (ஆஸ்திரியா)
- லண்டன் (பிரித்தானியா)
- பிராங்க்பர்ட் (ஜேர்மனி)
- சியோல் (தென் கொரியா)
- ஹேம்பர்க் (ஜேர்மனி)
- பிரேக் (செக் குடியரசு)
- முனிச் (ஜேர்மனி)
இதே பட்டியலில் இந்தியாவில் உள்ள சென்னை 89-வது இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த பசுமையான 100 நகரங்களின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு எது தெரியுமா? சுவிற்சர்லாந்து
Reviewed by Author
on
September 14, 2016
Rating:

No comments:
Post a Comment