2017ஆம் கல்விஆண்டுக்கான பாடசாலைத்தவணைகள் குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு....
2017ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணைகள் விபரத்தை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள அரச தனியார் கல்வியமைச்சின் கீழ்வரும் சகல கல்வி நிறுவனங்களுக்குமான தவணை விபரம் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டிலுள்ள சகல தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்காக திறக்கப்படும்.
எனினும் முதலாம் தவணைக்கான விடுமுறை தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் 06ஆம் திகதியும் வழங்கப்படும். அதாவது விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும்.
இரண்டாம் தவணைக்காக சகல தமிழ், சிங்களப் பாடசாலைகள் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரைக்கும் முஸ்லிம் பாடசாலைகள் முதற்கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் மே மாதம் 26ஆம் திகதிவரைக்கும் பின்னர் ஜூன் மாதம் 28ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 18வரைக்கும் திறந்திருக்கும்.
மூன்றாம் தவணைக்காக சகல தமிழ், சிங்களப் பாடசாலைகள் செப்ரம்பர் 06ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரைக்கும் முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 08ஆம் திகதிவரைக்கும்
திறந்திருக்கும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான ரமழான் நோன்புவிடுமுறை மே 27 முதல் ஜூன் 27 வரையும் வழங்கப்படும்.
2017ஆம் கல்விஆண்டுக்கான பாடசாலைத்தவணைகள் குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு....
Reviewed by Author
on
November 03, 2016
Rating:

No comments:
Post a Comment