ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிக்கின்றனர்....
ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவில் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும், இவர்களில் அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதில்லை எனவும், வைபர், வட்ஸ்அப், மெசன்ஜர் போன்ற தொடர்பாடல் வழிகளில் தொடர்பு கொள்வதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சன்னா, தேவா மற்றும் பிரகாஸ் என்ற மூன்று பேரே இந்தக் குழுவினை வழிநடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளின் உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்கள் பலர் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவினர் பயன்படுத்தும் வாள்கள் பிரேஸில் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை எனவும் 20 மோட்டார் சைக்கிள்கள் அவர்களிடம் காணப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆவா குழுவினர் தொடர்பில் ஒன்பது பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆவா குழுவில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் அங்கம் வகிக்கின்றனர்....
Reviewed by Author
on
November 03, 2016
Rating:

No comments:
Post a Comment