ஆவா குழுவினை நானும் எதிர்க்கின்றேன் - சம்பந்தன்
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆவா குழு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஆவா குழுவிற்கு நான் மட்டுமன்றி வடக்கு மக்களுக்கும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த குழு நினைக்கும் அளவிற்கு பெரிய ஒர் குழு கிடையாது.
இந்தக்குழுவினர் வடக்கு மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் மட்டுமல்ல நானும் அந்தக்குழுவினரை எதிர்க்கின்றேன்.
வடக்கு மக்கள் நான்றாக வாழவே விரும்புகின்றார்கள். இந்த ஆவா குழு இல்லாத பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றது.
அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதே இந்த குழுவின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்தக்குழுவிற்கு யாரேனும் உதவிகள் வழங்கப்படக்கூடும். நாம் அதனையும் எதிர்க்கின்றோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவினை நானும் எதிர்க்கின்றேன் - சம்பந்தன்
Reviewed by Author
on
November 01, 2016
Rating:
Reviewed by Author
on
November 01, 2016
Rating:


No comments:
Post a Comment