அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் தோன்றிய ஆவா என்பதன் பொருள் ---வந்துவிட்டோம் என்று சொல்லு


காலத்திற்கு காலம்இலங்கை அரசாங்கம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஏதோவொரு வகையிலான மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின்ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர், வடக்கில் ஒரு வகையான தகிப்பு நிலையை உருவாக்கி, அதன்மூலமாக வடமாகாணம் முழுவதையும், அச்சம் கலந்த, மக்களை இராணுவப் பாதுகாப்பு சூழலுக்குள்வைத்திருப்பது தான் இலங்கை அரசின் பிரதான இலக்கு.

அதற்காக அது பல்வேறு மார்க்கங்களையும், வழி வகைகளையும் தேடிக் கொண்டிருக்கிறது.

யுத்தத்திற்குபின்னர் வடக்கில் இராணுவத்தினரின் தேவை அதிகம் இல்லை என அடிக்கடி வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டிக்கொண்டிருக்கும் சூழலில் அந்த கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்து, ஆயுதம் தரித்த இராணுவத்தினரின்சேவை வடக்கிற்கு நிச்சயம் தேவை என்பதைக் காட்ட அவர்கள் எடுத்த முயற்சி கண்டிப்பாக இப்பொழுதுபலனளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

சர்வதேச சமூகத்திற்குக்காட்டவே அரசாங்கம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. தவிரவும், வடக்கில் இவ்வாறான வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் அதிகரித்தால் வட பகுதி மக்களே எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக்கள் என்று அரசைக் கோருவர்.

அதன் மூலமாகவும் வடக்கில் இராணுவத்தினரையும், காவல்த்துறையினரையும் நிலை நிறுத்தி வைக்க உதவும் என்பது கணிப்பு. அந்தக் கணிப்பு தவறவில்லை.

இந்த ஆயுதம்தாங்கிய குழுக்களை உருவாக்கியதில் முதல் முக்கிய பங்கு வகித்தது மகிந்த ராஜபக்சவும்அவர், சகோதரன் கோத்தபாய ராஜபக்சவும் தான் என்பது வரலாறாகி விட்டது. எனினும் அவர்கள் பயன்படுத்திய உத்திகளைத் தான் தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்தி வருகின்றது.

வடக்கில் நிலைகொண்டிருக்கும் ஆவா குழுவின் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கத்திற்கும் பங்கிருப்பதாகவும், இராணுவத்தினரின் முழு ஆதரவு இந்தக் குழுவிற்கு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இதனை சட்ட ஒழுங்குஅமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேட்டபோது, குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்று இருக்கிறார் அமைச்சர்.

இதேவேளை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த ஆட்சியில் போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவரின் தேவைக்கு ஏற்பவே ஆவா குழு யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், இராணுவப்பிரதானி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அது மாத்திரமல்லாது தமிழ்க் கட்சிகளை அடக்குவதற்காகவும் இது போன்ற குழுக்கள் வடக்கில் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் தன்னுடைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆவாக்குழுவை வைத்து, தெற்கில் அரசியல் செய்யும் இனவாதக் கட்சிகள், இது விடுதலைப் புலிகளின்மீள் உருவாக்கம் என்று கதைவிடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள்இப்பொழுதே களத்தில் இறங்கி வேலை செய்கின்றார்கள்.

உண்மையில் இந்தஆவா என்னும் பெயர் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தால், வந்துவிட்டோம் என்று பொருள்படுகின்றது.

இதை இரண்டு வகையாகப்பயன்படுத்தலாம். அதாவது வடக்கில் 2009ம் ஆண்டில் தோற்றுப்போன புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று கூறுவதற்கு. அல்லது மீண்டும் தமிழ் மக்களை அடக்க வந்துவிட்டோம் என்று பொருள் கொள்ளலாம்.

எதுவாயினும் இரண்டிலும்தமிழ் மக்களுக்கு ஆபத்து தான் காத்திருக்கிறது என்பது பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் தான்தெற்கில் இனவாதத்தை முதன்மையாகக் கொண்டு செயற்படும் ராவண பல அமைப்பு நீங்கள் வடக்கில்ஆவாவை உருவாக்கிய அதாவது வந்துவிட்டோம் என்பதை உருவாக்கினால் நாங்கள் தெற்கில் வாங்க குழு என்ற அமைப்பை ஆரம்பிப்போம் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

ஆக, மொத்ததில் இந்த வாள் வெட்டுக்குழுக்களை வைத்து இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இன்னுமொரு இனவெறி அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பதை உணரமுடிகின்றது.

இதுவொருபுறமிருக்க,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் வருவது வடக்கில் ஆவா குழு வந்துபோவதைப் போன்று இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நக்கலாக கூறியிருப்பதாக நாடாளுமன்றத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியிருப்பினும்,ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு தெற்கு அரசியல்வாதிகள் இப்பொழுதுவேட்டு வைத்துவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும்துணைபோவது தமிழ் மக்களின் வாழ்வின் மீட்க முடியாத சாபம்.

வடக்கில் தோன்றிய ஆவா என்பதன் பொருள் ---வந்துவிட்டோம் என்று சொல்லு Reviewed by Author on November 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.