பிரான்சில் 10 பேர் அதிரடியாக கைது ...!
பிரான்சில் இன்று அதிரடியாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்சில் நீஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் 10 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் 86 பேர் உயிரிழந்திருந்த நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய 10 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் நீஸ் நகரிலும், ஒருவர் Nantes நகரிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், Elite அதிரடிப்படையினர் மேற்கொண்டி சுற்றிவளைப்பின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் 96 மணி நேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் 10 பேர் அதிரடியாக கைது ...!
Reviewed by Author
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment