இலங்கை நாட்டிற்கு ஒரு சல்யூட்!
மழைபொழிவு அதிகம் உள்ள நாடு என்றபோதிலும், மழைக்காலங்களில் அதிகமாக பரவும் மலேரியா நோயினை முற்றிலுமாக ஒழித்து சுகாதார விடயத்தில் சாதனை படைத்துள்ள இலங்கை நாட்டிற்கு ஒரு சல்யூட் போட வேண்டும்.
2 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 439 மக்கள் தொகை கொண்ட இலங்கை, நாட்புறமும் கடல்களால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.
கடல்களால் சூழப்பட்ட நாடு என்ற காரணத்தினாலேயே இங்கு மழைப்பொழிவு அதிகம். இதனால் கொசுவின் உற்பத்தி அதிகமாகி, மலேரியா நோயின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்ற நிலையிலும், மழைக்காலங்களில் பரவும் நோயான மலேரியாவை ஒழித்துள்ள இலங்கை நாட்டினை, உலக சுகாதார துறை கௌரவித்துள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் மலேரியா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்று அறிவிக்கப்பட்டது இலங்கை. அது மட்டுமின்றி 1934 - 1935 இந்த காலகட்டம் இலங்கையின் மிக மோசமான காலமாகும்.
இந்த ஒரு வருடத்தில் இலங்கையில் நிலவி வந்த கடுமையான வறட்சி, உணவு பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக அதிகமான மக்கள் மலேரியா தொற்றுக்கு ஆளானார்கள்.
மலேரியாவினை ஒழிப்பதற்காக இலங்கையில் முதல் முதலாக 1940 ஆம் ஆண்டு DDT எனும் இராசயன மருந்து பயன்படுத்தப்பட்டது. அன்று தொடங்கிய இந்த போராட்டம் 2016 ஆம் ஆண்டில் தான் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு வருடமும் 1,000 பேர் மலோரியா நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்கள். இதனை தடுக்க இலங்கை அரசு பல்வேறு சுகாதார முயற்சியினை மேற்கொண்டு வந்ததன் பயனாக, கடந்த 3 1/2 வருடங்களில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என இலங்கை சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உலக சுகாதாரத்து துறையானது, இலங்கையில் பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், மலோரிய நோய் இல்லாத நாடாக இலங்கையை அறிவித்துள்ளது.
தென்- கிழக்கு ஆசிய நாடுகளில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடாக இலங்கை தெரிவாகியுள்ளது. இதற்கு முன்னர் மாலத்தீவு இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட தென்- கிழக்கு ஆசிய நாடுகளுக்காக நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலேரியாவை ஒழித்து சுகாதாரப்பணியை செவ்வனே ஆற்றிய இலங்கை நாட்டிற்கு எங்களுடைய ஆதரவு தொடர்ந்து கொண்டே இருக்கும். இதே போன்று தங்களுடைய சுகாதாரப்பணியை தொடர நாங்கள் வாழ்த்துகிறோம் என உலக சுகாதாரத்துறையின் இயக்குநர் கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த மாதம் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதற்கான அறிவிப்பை உலக சுகாதார துறை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாட்டிற்கு ஒரு சல்யூட்!
Reviewed by Author
on
December 04, 2016
Rating:

No comments:
Post a Comment