அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளர் பதியேற்றார்!


ஐ.நா சபையின் பொது செயலாளராக முன்னாள் போர்த்துக்கலின் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ் இன்று பதவியேற்றார்.

தற்போது ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பின் தலைவராக செயற்படும் குட்டெரெஸ், எதிர்வரும் ஜனவரி மாதம் ஐ.நா. பொதுச்செயலராக கடமையாற்றுவார்.

சமகால ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் எதிர்வரும் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய செயலாளர் இன்று பதவியேற்றார்.

புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள்.

இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், போர்த்துக்கலின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயரலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பதவியேற்றார். 193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9வது பொதுச் செயலாளராக குத்தோரஸிற்கு, பான் கீ மூன் பதவியேற்பு செய்து வைத்தார்.

ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளர் பதியேற்றார்! Reviewed by Author on December 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.