யாழ். வலிகாமம் மக்களுக்கான கரையோரப்பகுதி கையளிப்பு
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம்(14) ஊறணி பகுதியில் வைத்து மேற்படி நிலம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதியினால் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் (2016) ஊறணி, காங்கேசன்துறை, தையிட்டி தெற்கு உள்ளிட்ட சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை செய்வதற்கு கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கரையோர பகுதியை விடுவித்து வழங்கவேண்டும்.என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிலம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவமோகனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். வலிகாமம் மக்களுக்கான கரையோரப்பகுதி கையளிப்பு
Reviewed by Author
on
January 14, 2017
Rating:
Reviewed by Author
on
January 14, 2017
Rating:


No comments:
Post a Comment