அண்மைய செய்திகள்

recent
-

உலகின் இளம் வயது கொலைகாரர்கள் இவர்கள் தான்...


இளம் வயது சிறுவர்கள் கொலைகாரர்களாக மாறுவதற்கு இந்த சமூகத்தில் நிலவும் மாறுபட்ட வாழ்க்கை முறையும், அதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் ஒழுக்கமற்ற பாடங்களுமே காரணம்.

5 அல்லது 6 வயது இருக்கும்போதே சிறு சிறு தவறுகளை தைரியமாக செய்யும் அளவுக்கு பக்குவப்படுத்தும் இவர்கள், நாளடைவில் கொலை, கொள்ளை போன்ற பெரிய தவறுகளை சர்வ சாதாரணமாக செய்கின்றனர்.

இவ்வாறு கொலை குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை, அவர்களது இளம் வயதிலேயே கண்டறிந்து திருத்தாவிடில், இவர்கள் தான் எதிர்காலத்தில் அதிபயங்கர குற்றவாளிகளாக உருவாகுவார்கள்.

அந்த வகையில் இளம் வயதிலேயே கொலை குற்றங்கள் புரிந்த சிறுவர்களை பற்றி பார்ப்போம்,

Willie James Bosket Jr

அமெரிக்காவை சேர்ந்த இச்சிறுவனின் வயது 15. இச்சிறுவன் திருடச்சென்ற இடத்தில் இரண்டு நபர்களை சுட்டுக்கொன்ற குற்றத்திற்கு கைது செய்யப்பட்டான். இது தொடர்பான வழக்கில் இவனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

Mary Flora Bell

11 வயதான இச்சிறுமி தனது 4 வயது மற்றும் 2 வயது சகோதரர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.


Amardeep Sada

இந்தியாவின் இளம் வயது கொலைகாரன். 8 வயதான இச்சிறுவன் ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையை கல்லால் அடித்து கொலை செய்துள்ளான்.


Jesse Pomeroy

14 வயதான இச்சிறுவன் குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளான். இந்நிலையில் 10 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுவனின் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான். ஆனால் தனது தவறை இச்சிறுவன் ஒப்புக்கொள்ளவில்லை.

இச்சிறுவன் கூறியது, நான் இந்த தவறை செய்யவில்லை. அப்படி நான் இந்த தவறை செய்தேன் என்றால்....நான் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும் என கூறினான்.

Robert Thompson மற்றும் Jon Venables

இங்கிலாந்தின் இளம் வயது கொலைகாரர்கள் ஆவார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த குழந்தைகளை துன்புறுத்துவது மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 2 வயது குழந்தையை ஷொப்பிங் மாலில் வைத்து கொலை செய்துள்ளனர்.










உலகின் இளம் வயது கொலைகாரர்கள் இவர்கள் தான்... Reviewed by Author on January 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.