அண்மைய செய்திகள்

recent
-

இயக்குநர் கவுதமன் மீது போலீஸ் தடியடி! அவனியாபுரத்தில் பரபரப்பு (வீடியோ)

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இயக்குநர் கவுதமன் தலைமையில் மாணவர்கள் அமைப்பு, தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு, தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று வேனியில் ஏற்றினர். இதனை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தடுத்ததால் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இயக்குநர் கவுதமன் மீது போலீஸ் தடியடி! அவனியாபுரத்தில் பரபரப்பு (வீடியோ) Reviewed by NEWMANNAR on January 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.