கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்: காணிகளை உறுதி செய்தால் வெளியேறத் தயார்..!
பொதுமக்களின் காணிகளிலேயே தாங்கள் இருக்கின்றோம் என்பதை உறுதி செய்தால் அவற்றில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானப்படை குழுத்தலைவர் கிஹான் செனேவிரத்ன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் கடந்த ஆறு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், தற்போது முகாம் அமைந்துள்ள காணி வனவளத் திணைக்களத்துக்குரியது. அந்த திணைக்களத்தின் அனுமதியுடனேயே குறித்த காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, முகாம் அமைந்துள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இருந்தால் அவை குறித்து உரிய அதிகாரிகளின் மூலம் விண்ணப்பித்தால் அந்த காணிகளை விடுவிக்க தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்: காணிகளை உறுதி செய்தால் வெளியேறத் தயார்..!
Reviewed by Author
on
February 06, 2017
Rating:
Reviewed by Author
on
February 06, 2017
Rating:


No comments:
Post a Comment