முசலி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் உலக வாய் சுகாதாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு.(படம்)
உலக வாய் சுகாதாரத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமயில் முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வும் விழிப்புனர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை வெளிமலை பாலர் பாடசாலையில் நடை பெற்றது.
'சுகாதாரமான வாய்,வாழலாம் மிடுக்காய்' எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம வளவாளராக பிராந்திய பல்வைத்திய அதிகாரி வைத்தியர் சிறிதேவி வேதவனம் கலந்து கொண்டார்.
இதன் போது வைத்தியர் மேரி அமிலா. வைத்தியர் எஸ். ஜெயபாரதி. மற்றும் பல்வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்.யு.மதீன். பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் கலந்து அனைவருக்கும் பல்துலக்குவதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் உலக வாய் சுகாதாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment