கிறிஸ்த்தவர்களின் இன்று புனித வெள்ளி ஆண்டவருடைய திருப்பாடுகளின்.....
கிறிஸ்த்தவர்களின் இன்று-14-04-2017 புனித வெள்ளி
மிகப் பழைமையான வழக்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.
சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.
பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.
இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டு போகலாம்.
திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.
பொது முன்னுரை
சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று அனைவரையும் அன்பு செய்தவருக்கு, புதுமைகள் பல செய்தவருக்கு, அநீதியை, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடியவர்க்கு, கிடைத்த மாபெரும் பரிசு அவமானத்தின் சின்னம் சிலுவை. ஆனால் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் அதையும் ஏற்றுக்கொண்டார். தன்னுயிரையே தியாகம் செய்தார். அன்பின் உச்சக்கட்டம் பிறருக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் அதைவிட மேலான அன்பு வேறு இல்லை என்பதை இதோ மாபரன் இயேசு நிருபித்து விட்டார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. எனவே, இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்தித்தவர்களாக இந்த வழிபாட்டில் பக்தியோடு பங்கு கொள்வோம். நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி ஈரப்பதை வெறுனையான பீடமும், எரியாத மெழுகுவத்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை விருந்து. முழு கவனத்தோடு பங்கு பெற்று நமக்காக இறந்த இயேசுவின் பாடுகளின் பயனை பெற்று செல்வோம்.
தற்போது குருவானவர் இயேசுவின் பாடுகளையும் இரத்தக்களங்களையும் நினைவுப்படுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் வெறுமையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மண்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.
எழுந்தவுடன் இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்குக் கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார்.

கிறிஸ்த்தவர்களின் இன்று புனித வெள்ளி ஆண்டவருடைய திருப்பாடுகளின்.....
Reviewed by Author
on
April 14, 2017
Rating:

No comments:
Post a Comment