மன்னார் சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த அதிகாரி M.A.M.அனஸ் அவர்களுக்கு தேசமான்ய விருது.
மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த முகமது அன்வர் முகமது அனஸ் அவர்கள் 31.03.2017 ஆம் திகதி தேசமான்ய விருதினை அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் மூலம் அநுராதபுர மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் யு.சு.இசாக்(MP) அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைமாணி பட்டதாரியும்(BA) உளவியல் துறை டிப்ளேமாதாரியும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சமுக விஞ்ஞான துறையில் முதுமானி பட்டப்படிப்பை(MA) தொடரும் இவர் அகில இலங்கை சமாதான நீதவானும்(JP) வடமாகான சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த அதிகாரியும்(SCCO) வவுனியா முல்லதை;தீவு கௌரவ நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரும்(CCO) ஆவார்.
இவர் மன்னார் உப்புக்குள ஜக்கிய அபிவிருத்தி அமைப்பின் உப செயலாளரும் உப்புக்குளம் YMMA அமைப்பின் தலைவரும் உப்புக்குளம் நலன்புரி அமைப்பின் அமைப்பாளரும மன்னார் அல்-அஸ்கர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினரும் ஆவார்.
இவர் மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த சேகுதாவுது முகமது அன்வர் முகமது காசிம் மசூதா தம்பதிகளின் மூத்த புதல்வரும் ஆவார்.
தொகுப்பு -வை.கஜேந்திரன்-
மன்னார் சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த அதிகாரி M.A.M.அனஸ் அவர்களுக்கு தேசமான்ய விருது.
Reviewed by Author
on
April 08, 2017
Rating:

No comments:
Post a Comment