யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயோதிபர் மரணம்.(படம்)
காட்டு யானையில் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று(6) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்தியா கியோமர் குரூஸ்(வயது-65) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,,
முள்ளிக்குளம் கிராம மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்கு சற்று அருகாமையில் மலங்காடு எனும் கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த சந்தியா கியோமர் குரூஸ்(வயது-65) என்பவர் நேற்று சனிக்கிழமை பாலைக்குழி பகுதியில் உள்ள அரிசி ஆலைக்குச் சென்று அரிசி குற்றி விட்டு மாலை 5 மணியளவில் மலங்காட்டில் உள்ள தனது வீடு நோக்கி அரிசி மூட்டையினை தோழில் சுமந்து கொண்டு நடந்து வந்துள்ளார்.
-இதன் போது மாங்காடு பாலைக்குழி உள்ளக பிரதான வீதியில் காட்டுப்பகுதியூடாக தனிமையாக வந்த காட்டு யானை ஒன்று குறித்த வயோதிபரை கடுமையாக தாக்கியுள்ளது.
-இதன் போது குறித்த வயோதிபார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவ்வீதியால் மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்களையும் குறித்த யானை தாக்க முட்டுபட்டுள்ளது.
எனினும் அவர்கள் அதிஸ்டவசமாக தப்பிச் சென்ற நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலங்காடு மற்றும் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக்கோரி கடந்த 38 நாட்களாக முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் முள்ளிக்குளம் மக்களின் சொந்த நிலங்கள் கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை முள்ளிக்குளம் கிராம மக்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயோதிபர் மரணம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
May 07, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 07, 2017
Rating:


No comments:
Post a Comment