வடகொரியாவில் அழுகிய நிலையில் பிணங்கள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜப்பான்
வடகொரியாவில் உள்ள பேய் கப்பலில் டசின் கணக்கில் அழுகிய நிலையில் உடல்கள் கிடப்பதை ஜப்பான் கடற்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வடகொரியாவின் கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 15 கப்பல்களில், அழுகிய நிலையில் டசின் கணக்கில் உடல்கள் கிடக்கின்றன. இது மீனவர்களின் உடலாக இருக்கும் என ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் தனது ஆட்சிகாலத்தில் மீன்பிடித் தொழில்துறையின் உற்பத்தியினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இராணுவத்துறையை கிம் ஜாங் பயன்படுத்திவருகிறார்.
ஆனால், இதுபோன்று பணிக்கு அனுப்பப்படுவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது என்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருத்துக்கள் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கிம் ஜாங்கின் ஆட்சி பிடிக்காத காரணத்தால் அங்கிருந்த தப்பித்து செல்லும்போது உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இதுபோன்ற, அதிக பிணங்களுடன் 15 கப்பல்கள் வடகொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இது பேய் கப்பல்கள் என அழைக்கப்படுகிறது.
வடகொரியாவில் அழுகிய நிலையில் பிணங்கள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஜப்பான்
Reviewed by Author
on
May 03, 2017
Rating:

No comments:
Post a Comment