கரும்புலி கப்டன் மில்லரின் தயாரின் ஈகைச்சுடர் ஏற்றலுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம்-Photos
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு இன்று மாலை சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக மோட்டர் சைக்கிள் ஊர்திப் பேரணியானது கைதடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக சாகச்சேரி பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது .
பின்னர் அங்கிருந்து எழுச்சிப் பேரணியானது சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சாவகச்சேரி புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாரிவனநாதர் சிவன்கோவிலை சென்றடைந்தது. சிவன் கோவில் முன்றலை பேரணி அடைந்ததும் கட்சியின் கொடியினை பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஏற்றினார்.பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதற் கரும்புலியான மில்லரின் தாயார் பொது சுடரினை ஏற்றி பொது கூட்டத்தினை ஆரம்பித்தார்.பொதுக்கூட்டம் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.
கரும்புலி கப்டன் மில்லரின் தயாரின் ஈகைச்சுடர் ஏற்றலுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
May 02, 2017
Rating:

No comments:
Post a Comment