வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் சித்திரைப் புத்தாண்டு விழா
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு விழா பாடசாலை அதிபர் தி.யுவராஜா தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழா இன்று காலை பாசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி கல்விப்பணிப்பாளர் மூ.த.சின்னையா, சிறப்பு விருந்தினராக பாடசாலை மேம்பாட்டு பிரதிநிதி ந.கிறேனியர், ஆசிரிய ஆலோசகர் கு.அருள்ராணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களுடன் வவுனியா முஸ்ஸிம் பாடசாலை ஆசிரியர்கள் எ.ஜோய், ரி.சதீஸ், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் சித்திரைப் புத்தாண்டு விழா
Reviewed by NEWMANNAR
on
May 19, 2017
Rating:

No comments:
Post a Comment