மன்னார் கிளை கௌரவதலைவரின் உலக செஞ்சிலுவைதின செய்தி.....
மன்னார் கிளை கௌரவதலைவரின் உலகசெஞ்சிலுவைதினசெய்தி
கடந்தகாலங்களில் இயற்கை மற்றும் மனித அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க செஞ்சிலுவைச் சங்கம் முன்னின்று உழைத்ததோடு மக்கள் மத்தியில் உதவிசெய்யும் மனோபாங்கும் மிகஉயர்ந்த நிலையிலேகாணப்பட்டது.
ஆனால் தற்போது இலங்கைத்திருநாட்டில் நகரமயமாக்கம் உலகமயமாக்கம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்ட துரிதவளர்ச்சியின் காரணமாக பொருளாதார நெருக்கடிகளையும் மேலும் பல சவால்களையும் இன்றைய சமூகம் சந்திக்கவேண்டியுள்ளது.
அத்துடன் உதவிசெய்யும் மனோபாங்குஅரிதாகிக் கொண்டுபோவது கவலைக்குரியவிடயமாகும்.
எனவே இன்றைய சமூகக்கலாச்சாரமாற்றங்களுக்கேற்ப நாமும் சிந்தித்து செயலாற்ற வேண்டியசமூகப் பொறுப்பு செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களாகிய எம் அனைவருக்கும் காணப்படுகின்றது.
அந்தவகையில் சமூகத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முகவர்களாகிய எமது மக்களின் குறிப்பாக இளைஞர்களின்ஆளுமை தலைமைத்துவம் உதவும் மனோபாங்கு ஒழுக்கம் என்பவற்றைவிருத்தி
செய்து வளமிக்கதோர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்கி எதிர்காலசவால்களை இலகுவாக வெற்றிப் பெறச்செய்வதோடு இன்னல்களில் வாடும் சமூகமக்களின் துயர் துடைக்கசெஞ்சிலுவையின் தொண்டராக முன்வரச் செய்வதே எமது நோக்காகும்.
மனிதாபிமானசிந்தனையுடன் வரும் அனைவருக்கும் எமதுசெஞ்சிலுவைச் சங்கத்தின் கதவுகள் எந்நேரமும் திறந்திருப்பதோடுசமுதாயத்தினை வலுப்படுத்துவதன் மூலம் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் இப்பாரியசமூகப் பொறுப்பில் என்னுடன் கரம் சேர்க்கும்படி இந்நன்நாளில் உங்கள் அனைவரையும் கேட்டு நிற்கின்றேன்.
செஞ்சிலுவைச் சேவையில்
ஜே.ஜே.கெனடி
கௌரவதலைவர்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் -மன்னார் கிளை.
மன்னார் கிளை கௌரவதலைவரின் உலக செஞ்சிலுவைதின செய்தி.....
Reviewed by Author
on
May 09, 2017
Rating:

No comments:
Post a Comment