வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட கொண்டாட்டங்கள்....
வவுனியா பொது வைத்தியசாலையில் சிங்கள, தமிழ் புது வருடத்தினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று(07) நடைபெற்றன.
இந்த நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றன.
புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்படும் கிராமிய பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டம், முட்டி உடைத்தல், கபடி மற்றும் ஓட்டப்பந்தய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட கொண்டாட்டங்கள்....
Reviewed by Author
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment