அன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்....
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருப்பதனை கண்டித்து யாழ்.கைதடியில் உள்ள வடமாகாண சபை முன்பாக இளைஞர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (15) மாலை 3 மணிக்கு வடமாகாணசபை முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்ட ஆர்ப்பாட்டத்தை வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த இளைஞர்கள் நடத்தியுள்ளனர்.
இதன்போது "மீட்பராக வந்த முதல்வரை துரோகத்தால் அழிப்பதா", "விக்னேஷ்வரனே எங்கள் முதல்வர்", " மக்களின் தெரிவை மறுக்க நீங்கள் யார்", "துரோகம் செய்துவிட்டு மக்கள் முன்வர துணிவுண்டா?" என்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இன்று இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனக்கு என்று அரசியல் ரீதியாக பலத்தை சேர்த்து வைக்கவில்லை, பொது மக்களுக்கு செய்யும் சேவைதான் எனக்கு இருக்கும் பலம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். நடப்பதை இருந்து பார்ப்போம் எனவும் முதலமைச்சர் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்....
 Reviewed by Author
        on 
        
June 15, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 15, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 15, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 15, 2017
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment