இந்திய இழுவைப்படகுகள் விடுவிப்புக்கு முன் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும்- என்.எம்.ஆலம்
இந்திய இழுவைப்படகுகள் விடுவிப்புக்கு முன் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சருக்கு இன்று சனிக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தங்களுக்கு மீளவும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சும் அதனோடு இணைந்து மகாவலி அபிவிருத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவியும் வழங்;கப்பட்டதையிட்டு வட பகுதி மீனவர்களாகிய நாம் மற்றற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
வடபகுதி மீனவர்கள் விடயத்தில் கரிசணையுடன் செயற்படும் தங்களின் இவ் அமைச்சை மாற்றம் செய்ய வேண்டாம் என நாம் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது கோரிக்கை நிறைவேறியதில் எமக்கு மகிழ்ச்சியே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்களால் விடுக்கப்பட்ட ஊடக வாயிலான அறிவிப்பானது தங்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களில் எமது கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டிருப்பதை நாம் அறிகின்றோம்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் விடுதலை, இந்திய இழுவைப்படகு விடுவிப்பு விடயத்தில் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து சற்று விலகி தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மனிதாபிமானமாக எமது நல்லிணக்கத்தை வெளிக்காட்டும்; விதமாக சில தீர்மானங்களை எடுத்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான எமது நிலைப்பாட்டை தங்களுடன் நாம் நடாத்திய பலசுற்றுப்பேச்சு வார்த்தைகளின் போது பல நிபந்தனைகளையும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து இருந்தோம்.
01. அதில் பிரதானமான இந்திய படகு விடுவிப்பானது 2015ம் ஆண்டளவில் கைப்பற்றகப்பட்ட படகுகள் மாத்திரம் விடுவிக்கப்பட வேண்டும் அவ்வாறு விடுவிப்பதாயின் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் பெறப்பட வேண்டும்.
02. அவர்கள் தொடர்ந்து வருவார்கள் எனில் தொடர்ந்து கைது செய்யப்படுவதுடன் படகுகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஏனைய படகுகள் விடுவிப்பானது நிறுத்தப்பட வேண்டும்.
03. இந்திய மீனர்களின் படகுகளால் சேதமாக்கப்பட்ட எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் வலைகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
04. வெளிநாட்டுப்படகுகள் திருத்த சட்டம் பாராளுமன்றில் விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.
05. உள்ளூர் இழுவைமடி கொண்டு செய்யப்படும் தொழில் முறைக்கான திருத்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றி இத்தொழில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
06. தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களால் செய்யப்படும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தல்.
07. நலிவுற்றுள்ள மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசங்களுக்கு நிதி மூலங்களை வழங்கி அச்சங்கங்கள் திறன்பட இயங்க ஆவணை செய்தல்.
08. கௌரவ ஜனாதிபதி கௌரவ வெளிவிவகார அமைச்சுடன் வடபகுதி மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திதரல்.
இது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இதனை நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி தங்களால் தரப்பட்டது.
ஆனால் இந்திய படகுகள் விடுவிப்புக்கான அறிவிப்பு வடபகுதி மீனவ தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாது படகு விடுவிப்பு தொடர்பான தங்களது அறிக்கை வடபகுதி மீனவர்களாகிய எம்மை ஆட்சரியப்படவைத்துள்ளது.
மேலும் இந்திய தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு உள்ளீர்க்கும் செயற்பாட்டை நிறைவேற்ற காலவரையரை எனும் போர்வையில் 03 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தக் கூடியவாறு தீர்வு திட்டம் ஒன்றை வரைந்து தங்களது இணக்கத்திற்காக தரப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
இது தீர்வு திட்டம் என்பதை விட வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள பொறி. இது விடயத்தில் தாங்கள் மீளவும் வடபகுதி மீனவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இந்திய தரப்புக்கு உரிய பதில் வழங்குவதுடன் இப்படகு விடுவிப்புக்கு முன்னர் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தாங்கள்; முன்வர வேண்டும். என கேட்டுக்கொள்கின்றேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
(10-06-2017)
-இவ்விடையம் தொடர்பாக கடற்தொழில் அமைச்சருக்கு இன்று சனிக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தங்களுக்கு மீளவும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சும் அதனோடு இணைந்து மகாவலி அபிவிருத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவியும் வழங்;கப்பட்டதையிட்டு வட பகுதி மீனவர்களாகிய நாம் மற்றற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
வடபகுதி மீனவர்கள் விடயத்தில் கரிசணையுடன் செயற்படும் தங்களின் இவ் அமைச்சை மாற்றம் செய்ய வேண்டாம் என நாம் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது கோரிக்கை நிறைவேறியதில் எமக்கு மகிழ்ச்சியே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்களால் விடுக்கப்பட்ட ஊடக வாயிலான அறிவிப்பானது தங்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களில் எமது கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டிருப்பதை நாம் அறிகின்றோம்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் விடுதலை, இந்திய இழுவைப்படகு விடுவிப்பு விடயத்தில் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையிலிருந்து சற்று விலகி தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மனிதாபிமானமாக எமது நல்லிணக்கத்தை வெளிக்காட்டும்; விதமாக சில தீர்மானங்களை எடுத்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான எமது நிலைப்பாட்டை தங்களுடன் நாம் நடாத்திய பலசுற்றுப்பேச்சு வார்த்தைகளின் போது பல நிபந்தனைகளையும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து இருந்தோம்.
01. அதில் பிரதானமான இந்திய படகு விடுவிப்பானது 2015ம் ஆண்டளவில் கைப்பற்றகப்பட்ட படகுகள் மாத்திரம் விடுவிக்கப்பட வேண்டும் அவ்வாறு விடுவிப்பதாயின் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் பெறப்பட வேண்டும்.
02. அவர்கள் தொடர்ந்து வருவார்கள் எனில் தொடர்ந்து கைது செய்யப்படுவதுடன் படகுகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஏனைய படகுகள் விடுவிப்பானது நிறுத்தப்பட வேண்டும்.
03. இந்திய மீனர்களின் படகுகளால் சேதமாக்கப்பட்ட எமது மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் வலைகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
04. வெளிநாட்டுப்படகுகள் திருத்த சட்டம் பாராளுமன்றில் விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.
05. உள்ளூர் இழுவைமடி கொண்டு செய்யப்படும் தொழில் முறைக்கான திருத்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றி இத்தொழில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
06. தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களால் செய்யப்படும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தல்.
07. நலிவுற்றுள்ள மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசங்களுக்கு நிதி மூலங்களை வழங்கி அச்சங்கங்கள் திறன்பட இயங்க ஆவணை செய்தல்.
08. கௌரவ ஜனாதிபதி கௌரவ வெளிவிவகார அமைச்சுடன் வடபகுதி மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திதரல்.
இது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இதனை நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி தங்களால் தரப்பட்டது.
ஆனால் இந்திய படகுகள் விடுவிப்புக்கான அறிவிப்பு வடபகுதி மீனவ தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாது படகு விடுவிப்பு தொடர்பான தங்களது அறிக்கை வடபகுதி மீனவர்களாகிய எம்மை ஆட்சரியப்படவைத்துள்ளது.
மேலும் இந்திய தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு உள்ளீர்க்கும் செயற்பாட்டை நிறைவேற்ற காலவரையரை எனும் போர்வையில் 03 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தக் கூடியவாறு தீர்வு திட்டம் ஒன்றை வரைந்து தங்களது இணக்கத்திற்காக தரப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
-மன்னார் நிருபர்-
(10-06-2017)
இந்திய இழுவைப்படகுகள் விடுவிப்புக்கு முன் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும்- என்.எம்.ஆலம்
Reviewed by NEWMANNAR
on
June 10, 2017
Rating:
No comments:
Post a Comment