டெனீஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள ரிசாட்டால் முடியவில்லையாம்!
வட.மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி இன்று (சனிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது கலந்து கொண்டு குறித்த வீதியை திறந்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிஸாட் பதியுதீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒருவர் மீது குற்றச்சாட்டினைச் சுமத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவ்வாறு குற்றச்சாட்டு குறித்த விடயங்களை ஆராய்ந்து பார்த்தே முடிவுகளைத் தெரிவிக்கவேண்டும்.
இதனைவிடுத்து அவதூறான விடயங்களை மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளின் மீது தெரிவிப்பதானது தாங்கிக்கொள்ள முடியாத விடயங்களாகும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சரியானமுறையில் விசாரணை செய்ததன் பின்னரே அவரை ஒரு குற்றவாளியாக அறிவிக்க முடியும். எமது நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக யாரும் தாமாக இவர்தான் குற்றவாளி என கூறமுடியாது” என அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
July 02, 2017
Rating:

No comments:
Post a Comment