இலங்கையை நோக்கி நகரும் 'கானி' (KAANI) புயல்!மன்னார் – புத்தளம் பகுதிக்கிடையே வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய வானிலை மாதிரிகளின்படி, கானி (KAANI) எனப் பெயரிடப்படவுள்ள புயல் திருகோணமலை ஊடாக இலங்கைக்குள் நுழைந்து, வவுனியா வழியாக நகர்ந்து மன்னார் – புத்தளம் பகுதிக்கிடையே வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🌪️ புயல் உருவாகும் விதம் மற்றும் நகர்வு
🔹 2026.11.25 – மலேசியாவின் பிந்துலு பகுதிக்கு வடக்கே காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளது.
🔹 2026.11.27 – மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்குத் தெற்காகப் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔹 மத்திய வங்காள விரிகுடாவை அடையும்போது புயலாக வலுப்பெறக்கூடும்.
🔹 இந்தப் புயலுக்கு மாலைதீவு பரிந்துரைத்த 'கானி' (KAANI) என்ற பெயர் வழங்கப்படவுள்ளது.
📍 எதிர்பார்க்கப்படும் புயலின் பாதை
1️⃣ திருகோணமலை (கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக)
2️⃣ வவுனியா
3️⃣ மன்னார் – புத்தளம் பகுதிக்கிடையே
4️⃣ அரபிக்கடல்
⚠️ இலங்கை முழுவதும் பாதிப்பு ஏற்படக்கூடிய வலயத்திற்குள்!
தற்போதைய வானிலை மாதிரிகளின்படி இலங்கை முழுவதும் இந்தப் புயலின் சாத்தியமான தாக்க வலயத்திற்குள் உள்ளடங்கியுள்ளது.
எனினும், இது தற்போதைய மாதிரிகள் காட்டும் பாதை மட்டுமே. இதில் மாற்றங்கள் ஏற்படலாம். சில மாதிரிகள் இந்தப் புயல் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கின்றன.
🇱🇰 அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
இலங்கை போன்ற ஒரு வளரும் நாட்டிற்கும் மக்களுக்கும் புயலை எதிர்கொள்ளத் தயாராகுவதற்கு போதிய கால அவகாசம் அவசியம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' புயலின் பாதிப்புகளிலிருந்து இலங்கை இன்னும் முழுமையாக மீளாத நிலையில், பொதுமக்களும் அரசாங்கமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
முன்னெச்சரிக்கை என்பது அச்சமல்ல; உயிர்களைக் காப்பாற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகும்!
🙏 இலங்கை வாழ் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தகவல் பகிரப்படுகிறது.
✍️ தகவல் மற்றும் கட்டுரை: நாகமுத்து பிரதீபராஜா
Reviewed by Vijithan
on
November 25, 2026
Rating:
%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D!%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81..jpg)

No comments:
Post a Comment