அண்மைய செய்திகள்

recent
-

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

 நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்தார்.

 

சாதாரணமாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், போட்டியாளரான நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் தேவைப்படுவதாகவும், தற்போதைய எரிவாயு தேவையைக் கருத்திற்கொண்டு நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் ஜியோ காஸ் (Geo Gas) நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.                                                          

                                                                                                                                                                          

அத்துடன், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள 'குட்வில்' (Goodwill) கப்பல் தற்போது தரையிறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏந்திய 'கொரண்டைன்' (Quarantine) கப்பல் நாளை (01) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதன் மூலம் இன்று (31) பிற்பகலில் கொழும்புக்கு  வழமை போன்று எரிவாயு விநியோகம் இடம்பெறுவதுடன், ஏனைய பகுதிகளுக்கு நாளை (01) முதல் விநியோகப் பணிகளை வழமை போன்று முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.






லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு Reviewed by Vijithan on October 31, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.