மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து வெளியேறிய தவிசாளர்.
இதில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சிகளும் தங்களது நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. ஜே. எம். ஜப்ரான் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியான கருத்துக்கள் ,அபிவிருத்தியில் பாராபட்சம் இன்னும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்காக தவிசாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்கெடுப்பின்போது 22 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஏனைய உறுப்பினர்கள் வாக்களிப்பு செய்வதற்கு முன்னர் தவிசாளர் தன் அதிகாரத்தின் நிமித்தம் சபையை ஒத்தி வைத்து எழுந்து சென்றுள்ளார்.
வாக்களித்தவர்களின் ,உதவிதவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில் தொடர்ந்து 2 உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் தவிசாளர் வாக்கெடுப்பின் இடை நடுவில் சபையை ஒத்தி வைத்து வெளியேறிச் சென்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து தவிசாளர் வெளியேறியமை தொடர்பாக சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்
மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடை நடுவே ஒத்தி வைத்து வெளியேறிய தவிசாளர்.
Reviewed by Vijithan
on
November 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
November 18, 2026
Rating:


No comments:
Post a Comment