யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம்
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் , வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பென்ஸ் காரை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.
தடுத்து வைத்து விசாரணை
இதன்போது, காரினுள் ஹெரோயின் போதைப்பொருள் , வாள் மற்றும் நக்கிள்ஸ் கிளிப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து காரில் பயணித்தவர்களை கைது செய்த பொலிஸார் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது , கைதானவர்களில் ஒருவர் கடந்த வருடம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகி , கடந்த 3 தினங்களுக்கு முன்னரே பிணையில் வந்தவர் என தெரியவந்துள்ளது.
யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம்
Reviewed by Vijithan
on
November 12, 2026
Rating:
Reviewed by Vijithan
on
November 12, 2026
Rating:


No comments:
Post a Comment