அண்மைய செய்திகள்

recent
-

4 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்: பலர் முன்னிலையில் மரணதண்டனை....


ஏமன் நாட்டில் நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது, தொடர்பாக குற்றவாளிக்கு பலர் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டின் Sanaa தலைநகரில் தான் இது போன்ற ஒரு அதிரடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Hussein al-Saket, 22 வயதான இந்த இளைஞர் நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்.


இது நிரூபிக்கப்பட்டதால், Hussein al-Saket-ஐ பலருக்கு முன்னிலையில் மரணதண்டனை வழங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதையடுத்து Hussein al-Saket Sanaa-வில் உள்ள Tahrir சதுரங்கத்தில் பலருக்கு முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் படி அவனின் இரண்டு கைகள் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவனது கழுத்தை சரியாக வைத்து, துப்பாக்கியை வைத்து அவனது உடலின் மீது ஐந்து முறை சுடப்பட்டது.


இதில் அவன் துடி துடித்து உயிரிழந்துள்ளான். இறந்த பின்பு அவனை கிரேன் ஒன்றில் கட்டி தூக்கிலடப்பட்டது போல், அங்கு தொங்கவிட்டுள்ளனர்.

ஏமனில் இது போன்று மரணதண்டனை நிறைவேற்றப்படுவது முதல் முறையல்ல, இதற்கு முன்னர் ஜுலை மாதம் 31-ஆம் திகதி Muhammad al-Maghrab(41) என்ற நபர் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இதே போன்று பலரின் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டில் அனைத்து சட்டங்களின் மூலதனமாக ஷரியா சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 




4 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்: பலர் முன்னிலையில் மரணதண்டனை.... Reviewed by Author on August 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.