நன்றி கெட்ட கிழக்கு முதலமைச்சர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்!
கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அகமட் நியமிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பங்களிப்பைச் செய்ததாகவும், அந்த நன்றியை மறந்து கிழக்கு முதலமைச்சரான நசீர் அகமட் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில், அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குப் பயணம் செய்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்ஒன்றை நடாத்தியிருந்தார்.
எம்மை அழைக்காது இந்தக் கலந்துரையாடலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நடத்தியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்மை அவர் புறந்தள்ளியுள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குப் பயணம் செய்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்ஒன்றை நடாத்தியிருந்தார்.
எம்மை அழைக்காது இந்தக் கலந்துரையாடலை கிழக்கு மாகாண முதலமைச்சர் நடத்தியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்மை அவர் புறந்தள்ளியுள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நன்றி கெட்ட கிழக்கு முதலமைச்சர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்!
Reviewed by NEWMANNAR
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment